பிரதிநிதித்துவ படம் 
இந்தியா

உத்​தர பிரதேசத்​தில் முதன்முறையாக மதுபானத் தொழில் முதலீட்டு மாநாடு: ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும் அரசு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்​தரபிரதேசத்​தில் முதன்​முறை​யாக மது​பானத் தொழிலுக்​கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடை​பெற உள்​ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்​பிலான முதலீட்டு திட்​டங்​களுக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

உ.பி.​யில் பல்​வேறு தொழில்​களை ஊக்​குவிக்க முதலீட்டு மாநாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் முதன்​முறை​யாக மது உற்​பத்​தியை ஊக்​குவிக்​கும் முதலீட்டு மாநாடும் நடை​பெற உள்​ளது. இந்த மாநாட்டை லக்​னோ​வின் இந்​திரா காந்தி பிர​திஷ்​டானில் மாநில கலால் துறை நடத்​துகிறது. இதில் 200-க்​கும் மேற்​பட்ட நிறு​வனங்​கள் பங்​கேற்​கும் எனவும் சுமார் ரூ.5,000 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும் எனவும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

உ.பி.​யில் பிற தொழில்​களு​டன் இணைந்து மது​பான தயாரிப்​புக்​கும் கடந்த ஆண்​டு​களில் முதலீட்டு திட்​டங்​கள் கையெழுத்​தாகின. அவற்​றில் சில தற்​போது செயல்​பாட்​டில் உள்​ளன. இச்​சூழலில், உ.பி.​யில் மது​பான உற்​பத்தி அதி​கரித்​தால் அரசுக்கு கலால் வரி வரு​மானம் அதி​கரிக்​கும் என்​ப​தால் மது​பானத் தொழிலுக்கு என தனி மாநாடு நடை​பெறுகிறது.

இதுகுறித்து உ.பி. கலால் துறை இணை​யமைச்​சர் (தனிப் பொறுப்​பு) நிதின் அகர்​வால் கூறுகை​யில், “கடந்த ஆண்​டு​களில் 'இன்​வெஸ்ட் உ.பி.’ திட்​டம் மூலம் மாநிலத்​தில் மது​பானம் அடிப்​படையி​லான தொழில்​களில் ரூ.39,479.39 கோடி முதலீட்​டுக்​கான 142 திட்​டங்​கள் பெறப்​பட்​டன. இதற்​காக 135 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. இவற்​றில் 46 நிறு​வனங்​கள் ரூ.7,888.73 கோடியை முதலீடு செய்​கின்​றன. 19 நிறு​வனங்​கள் ரூ.2,339.6 கோடியை முதலீடு செய்து உற்​பத்​தியை தொடங்​கி​யுள்​ளன’’ என்​றார்.

உபி அரசின் கலால் கொள்​கை​யின் கீழ், நடப்பு நிதி​யாண்​டில் 3,171 உள்​நாட்டு மது​பானக் கடைகள் குறைக்​கப்​பட்​டுள்​ளன. அதேசம​யம், 3,392 பியர் கடைகள் மற்​றும் 2,799 வெளி​நாட்டு மது​பானக் கடைகள் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளன. கிராமப்​புறங்​களில் 2,791 உள்​நாட்டு மது​பானக் கடைகளில் பியர் விற்​பனை செய்ய அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

2016-17-ம் ஆண்​டில் உ.பி. கலால் துறை ரூ.14,273.33 கோடி வரு​வாய் ஈட்​டியது. இது, 2024-25-ம் ஆண்​டில் ரூ.52,573.07 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. உயிரி எரிபொருள் கொள்​கை​யின் கீழ் உத்​தரபிரதேசம் 182.6 கோடி லிட்​டர் பவர் ஆல்​கஹால் உற்​பத்தி செய்​து நாட்​டிலேயே முதலிடத்​தில்​ உள்​ளது.

SCROLL FOR NEXT