போலீஸ் நிபந்தனைகளை மீறி நூற்றுக்கணக்கான கார்களின் அணி வகுப்புடன் மா விவசாயிகளின் குறைகளை கேட்டறிய சித்தூர் மாவட்டம் வந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. 
இந்தியா

நிபந்தனைகளை மீறி ஆயிரக்கணக்கில் குவிந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸார்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பிப்பு

செய்திப்பிரிவு

சித்தூர்: ​மாம்பழ விவ​சா​யிகளிடம் குறை​களை கேட்க நேற்று சித்​தூர் மாவட்​டம் வந்த முன்​னாள் ஆந்​திர முதல்​வர் ஜெகன் மோகன் ரெட்​டியை சந்​திக்க போலீஸ் நிபந்​தனை​களை மீறி ஆயிரக்​கணக்​கான ஒய்​.எஸ்​.ஆர் காங்​கிரஸ் கட்​சி​யின் தொண்டர்கள் குவிந்​த​தால், சென்​னை-பெங்​களூரு தேசிய நெடுஞ்​சாலை​யில் போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​தது.

இந்த ஆண்டு மா விளைச்​சல் அதி​க​மான​தால், மாங்​காய் மண்​டிகளில் மாங்​காய்​களை மிக குறைந்த விலைக்கு விவ​சா​யிகள் விற்க நேரிட்​டது. கிலோ​வுக்கு ரூ.4 மானி​யம் கொடுப்​ப​தாக ஆந்​திர அரசு அறி​வித்​தும் அறுப்பு கூலி கூட கட்​டு​ப்படியாகாத​தால், சித்​தூர், திருப்​ப​தி, மதனபல்​லி, நெல்​லூர், ஓங்​கோல், கர்​னூல் ஆகிய பகு​தி​களில் விவ​சா​யிகள் மாங்​காய்​களை சாலைகளில் கொட்டி அழித்து வரு​கின்​றனர். இதனால் மா விவ​சா​யிகளின் பிரச்​சினை​களை தெலுங்கு தேசம் கட்​சி, மத்​திய அரசின் பார்​வைக்கு கொண்டு சென்​றுள்​ளது.

ஜெகன்​மோகன் ரெட்டி வருகை: இந்​நிலை​யில், ஆந்​திர மாநில முன்​னாள் முதல்​வர் ஜெகன்​மோகன் ரெட்​டி, மா விவ​சா​யிகளின் பிரச்​சினை​களை கேட்​டறிய முடிவு செய்​து, நேற்று மா விளைச்​சல் அதி​க​மாக உள்ள சித்​தூர் மாவட்​டம், பங்​காரு​பாளை​யம் மாங்காய் மார்க்​கெட்​டுக்கு நேரில் வரு​வ​தாக அறி​வித்​தார். ஆனால், ஜெகன்​மோகன் ரெட்டி பங்​காரு பாளை​யத்​துக்கு ஹெலி​காப்​டர் பயணம் செய்ய ஆந்​திர அரசு அனு​மதி அளித்​தது.

மேலும், ஊர்​வலமோ, பொதுக்​கூட்​டமோ நடத்த கூடாது என்​றும், மாங்​காய் மார்க்​கெட்​டுக்கு ஜெகன் உடன் 500 பேருக்கு மேல் செல்ல கூடாது எனவும் சித்​தூர் மாவட்ட எஸ்பி உத்​தர​விட்​டிருந்​தார். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி பல கார்​களு​டன் ஊர்வலமாக பங்​காரு​பாளை​யம் வந்​தார். இதனால் சென்​னை-பெங்​களூரு தேசிய நெடுஞ்​சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்பட்​டது.

ஒய்​.எஸ்​.ஆர் காங்​கிரஸார் ஜெக​னிடம் அருகே செல்ல முண்​டி​யத்​தனர். இதனால் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதில் ஒரு போலீஸ்காரரும், ஒரு பெண்​ணும் மயக்​கமடைந்து சாய்ந்​தனர். இவற்றை படம் பிடித்த தெலுங்கு பத்​திரிக்கை புகைப்பட கலைஞர் சிவக்​கு​மாரை ஒய்​.எஸ்​.ஆர் காங்​கிரஸார் அடித்து அவரிடம் இருந்த கேம​ராவை பிடிங்கி கொண்​டனர்.

காயம் அடைந்​தவர்​களை பங்​காரு​பாளை​யம் மருத்​து​வ​மனை​யில் கொண்டு போய் சேர்த்​தனர். மாங்​காய் மார்க்​கெட்​டுக்கு சென்ற ஜெகன் மா விவ​சா​யிகளிடம் இந்த ஆண்டு விளைச்​சல் மற்​றும் நஷ்டம் குறித்து பேசி​னார். பல விவ​சா​யிகள் ஜெகன் முன்னிலை​யில்​ மாங்​காய்​களை டன்​ கணக்​கில்​ சாலை​யில்​
கொட்​டி அழித்​தனர்​.

SCROLL FOR NEXT