இந்தியா

அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாதது ஏன்? - முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் தனக்கு வழங்​கப்பட்ட அரசு பங்​களாவை காலி செய்​யாதது ஏன் என்​பது குறித்து உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்​திரசூட் விளக்​கம் அளித்​துள்​ளார்.

உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக இருந்த டி.ஒய். சந்​திரசூட்​டின் பதவிக்​காலம் முடிவடைந்த நிலை​யிலும், அரசு பங்​களாவை அவர் காலி செய்​யாமல் இருப்​ப​தாக மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் கடிதம் எழு​தி​யுள்​ளது. இதுகுறித்​து, டி.ஒய்​.சந்​திரசூட் விளக்​கம் அளித்​துள்​ளார். அதில் அவர் கூறியுள்​ள​தாவது: எனது மகள்​கள் பிரி​யங்கா (16) மற்​றும் மஹி (14) மரபணுக் குறை​பாட்​டால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள். இந்த நோய்க்கு இந்​தி​யா​வில் மட்​டுமல்ல. உலகின் எந்த இடத்​தி​லும் மருத்​துவ சிகிச்சை கிடை​யாது. அவர்​களுக்கு வீட்​டிலேயே சிகிச்சை வசதி​களை செய்து தந்​துள்​ளோம்.

அவர்​களின் தனி​யுரிமைக்​காக கழிப்​பறை மற்​றும் வீட்​டின் பிற பகு​தி​களுக்கு சக்கர நாற்​காலி செல்​லும் வகை​யில் புதிய வீட்டை வடிவ​மைக்க வேண்​டிய தேவை இருந்​தது. என்​னுடைய கட்​டிட ஒப்​பந்​த​தா​ரர் ஜூன் இறு​திவரை புதிய வீட்​டின் உள்​கட்​டமைப்பு பணி​கள் நடை​பெறும் எனக் கூறிய​தால், அப்​போதைய தலைமை நீதிப​தி​யிடன் கடிதம் அளித்து தங்​கு​வதற்கு ஒப்​புதல் பெற்​றிருந்​தேன். மேலும், எங்​கள் வீட்​டில் சிறிய அவசர சிகிச்​சைப் பிரிவு(ஐசி​யூ) உள்​ளது. எனது மகளுக்கு நள்​ளிர​வில் உடல்​நிலை மோசமடைந்​தால் உடனடி சிகிச்சை அளிக்க வேண்​டும்.

எய்ம்ஸ் மருத்​து​வர்​களுக்கு மட்​டுமே அவர்​களது நிலைமை தெரி​யும். நான் தற்​போது தங்​கி​யிருக்​கும் வீடு முழு​வதும் உள்ள பொருள்​களை புதிய வீட்​டுக்கு எடுத்​துச் செல்​லும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. விரை​வில் புதிய வீட்​டுக்கு மாறி​விட்டு அதுதொடர்​பான ஆவணங்​களை நீதி​மன்ற நிர்​வாகத்​திட​மும், மத்​திய அரசுக்​கும் தெரி​விப்​பேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். நீதிபதி சந்​திரசூட்​டுக்கு அபிநவ், சிந்​தன் என 2 மகன்​களும் உள்​ளனர். அவர்​கள் இரு​வருமே வழக்​கறிஞர்​கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT