இந்தியா

கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக மாநிலத்​தில் பாதிக்​கப்​பட்ட மாம்பழ விவ​சா​யிகளுக்கு மத்​திய அரசு இழப்​பீடு வழங்க இருப்​ப​தாக மத்​திய அமைச்​சர் பிரஹலாத் ஜோஷி தெரி​வித்​தார். கர்​நாடக மாநிலத்​தில் மாம்பழ விளைச்​சல் அதி​கரித்​ததால் உரிய விலை கிடைக்​காத​தால் விவ​சா​யிகள் விரக்தி அடைந்​துள்​ளனர்.

இதனால் விவ​சா​யிகளுக்கு மத்​திய அரசு இழப்​பீடு வழங்க வேண்​டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மத்​திய நுகர்​வோர் விவ​காரங்​கள், உணவு மற்​றும் பொது விநி​யோக அமைச்​சர் பிரஹலாத் ஜோஷி, மத்​திய வேளாண் துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கானை நேரில் சந்​தித்து கோரிக்கை விடுத்​தார்.

இதுகுறித்து பிரஹலாத் ஜோஷி கூறும்​போது, ‘‘எனது கோரிக்​கையை ஏற்று விவ​சா​யிகளுக்கு நியாய​மான இழப்​பீட்டை மத்​திய வேளாண் அமைச்​சர் சிவ​ராஜ்சிங் சவு​கானும், பிரதமர் நரேந்​திர மோடியும் உறுதி செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு விவ​சா​யிகளின் சார்​பில் நன்​றியை தெரி​வித்​துக்​கொள்​கிறேன்​'' என்​று தெரிவித்துள்ளார்​.

SCROLL FOR NEXT