இந்தியா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

சாந்தகுமார்

புதுடெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி, சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து இன்று வீடு திரும்பினார்.

காங்​கிரஸ் நாடாளு​மன்ற கட்சி தலை​வர் சோனியா காந்​திக்கு வயிறு தொடர்​பான பிரச்​சினை ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து டெல்​லி​யில் உள்ள சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனு​ம​திக்​கப்​பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து கங்கா ராம் மருத்​து​வ​மனை​யின் தலை​வர் டாக்​டர் அஜய் ஸ்வரூப் கடந்த 16-ம் தேதி வெளி​யிட்ட அறிக்​கை​யில், “சோனியா காந்தி ஞாயிற்​றுக்​கிழமை இரவு 9 மணிக்கு சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். வயிறு தொடர்​பான பிரச்​சினைக்​காக இரைப்பை குடல் நோய் பிரி​வில் சிகிச்சை பெற்று வரு​கிறார். அவரது உடல்​நிலை சீராக உள்​ளது. மருத்​து​வர்​களின் கண்​காணிப்​பில் அவர் இருந்து வரு​கிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 17-ம் தேதி மருத்துவர் அஜய் ஸ்வரூப் வெளியிட்ட அறிக்கையில், "அவர் உடல்நிலை நன்றாக உள்ளது. சிகிச்சைக்கு நல்ல முறையில் அவரது உடல் ஒத்துழைக்கிறது. வயிற்றுத் தொற்றிலிருந்து அவர் மீண்டு வருகிறார். அவரது உணவுமுறை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரது டிஸ்சார்ஜ் ஆகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்கள் மருத்துவர்கள் குழு, டாக்டர் எஸ்.நந்தி மற்றும் டாக்டர் அமிதாப் யாதவ் ஆகியோர் அவரது உடல்நலம் மற்றும் உணவை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உடல்நலன் தேறிய சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார். சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி, மருத்துவமனைக்கு வந்து அவரை அழைத்துச் சென்றார்.

SCROLL FOR NEXT