இந்தியா

கர்நாடக விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சித்தூர்: கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து ஆந்திர அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு பெங்களூரு நோக்கி சென்றது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பெங்களூரு புறநகர் ஹொஸக்கோட்டை பகுதியில் ஒரு லாரி மீது இந்தப் பேருந்து மோதியது.

இந்த கோர விபத்தில் சித்தூர் மாவட்டம், கங்காதர நெல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து ஹொஸக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரவும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவும் சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இந்நிலையில் 6 பேரின் உடல்களுக்கும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT