இந்தியா

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்: சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானா மாநில பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.

தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை ஹைதராபாத்தில் போலீஸார் கைது செய்தனர். மேலவை உறுப்பினராக உள்ள கவிதா, நேற்று பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த மகளிர் அணியினருடன் இணைந்து தெலங்கானா மாநில அரசு பேருந்து கழக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள தெலங்கானா அரசு பேருந்து கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில், கவிதா உட்பட மகளிர் சங்கத்தை சேர்ந்த பலரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT