இந்தியா

தெலங்கானா மாநிலத்தில் 17 நக்சலைட்கள் சரண்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானாவில் 17 மாவோயிஸ்ட்கள் நேற்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் சரண் அடைந்தனர்.

இதுகுறித்து கொத்தகூடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் ராஜூ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீப காலமாக மாவோயிஸ்ட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்கவுன்ட்டர்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். சத்தீஸ்கர், ஒடிசா மாநில எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட் தலைவர்கள், கமாண்டர்களும் இறந்துள்ளனர்.

மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ள பலர் தங்கள் தவறை உணர்ந்து சரண் அடைகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 282 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்து மீண்டும் மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். தற்போது கொத்தகூடம் பகுதியில் 17 மாவோயிஸ்ட்கள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் சரண் அடைந்தனர். இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT