இந்தியா

நாடாளுமன்ற உறுப்பினரின் குடியிருப்பு பராமரிப்புக்கு ரூ.3 லட்சம் செலவு

செய்திப்பிரிவு

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் குடியிருப்பையும் ஆண்டுதோறும் பராமரிப்பதற்கு சராசரியாக ரூ.2.95 லட்சம் செலவிடப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மக்களவை யில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை பராமரிப்பதற்கு கடந்த 2011-12 நிதியாண்டில் ரூ.17.5 கோடியும் 2012-13-ல் ரூ.18.28 கோடியும் 2013-14-ல் ரூ.20.45 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. நடப்பு 2014-15 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையில் ரூ.3.52 கோடி செலவிடப் பட்டுள்ளது.

டெல்லியில் 24 லட்சம் குடியிருப்புகள் தேவைப்படுவதாகக் கணக்கிடப்பட் டுள்ளது. இந்தத் தேவையை டெல்லி வளர்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) மட்டும் பூர்த்தி செய்ய முடியாது.

இந்த ஆண்டில் 25 ஆயிரம் குடியிருப்புகளை கட்டித் தர டிடிஏ திட்டமிட்டுள்ளது. இதில் பெரும்பாலான குடியிருப்புகள் குறைந்த விலையில் கிடைக்கும் என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT