இந்தியா

பேப்பர், பேனா, குர்ஆன் கேட்ட ராணா: தினமும் 8+ மணி நேரம் என்ஐஏ விசாரணை

வேட்டையன்

புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்​பை​யில் நிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தீவிரவாதி தஹாவூர் ராணா, தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளின் விசாரணையில் உள்ளார். அவரிடம் நாளொன்றுக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை விசாரணை மேற்கொள்வதாக தகவல். விசாரணையில் உள்ள அவர், தனக்கு பேனா, பேப்பர் மற்றும் குர்ஆன் வேண்டுமென கேட்டுள்ளதாக தகவல்.

மேலும், அவருக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் படுவதாகவும், தனது தரப்பு வழக்கறிஞர்களை சந்திக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

64 வயதான அவர், கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்​கா​வில் கைது செய்​யப்​பட்​டார். பாகிஸ்​தானைச் சேர்ந்த அவரை இந்​தி​யா​வுக்கு அழைத்து வர மத்​திய அரசு நடவடிக்கை மேற்​கொண்​டது. இந்​தி​யா​வின் கோரிக்​கையை ஏற்ற அந்​நாட்டு உச்ச நீதி​மன்​றம் ராணாவை இந்​தி​யா​வுக்கு நாடு கடத்த உத்​தர​விட்​டது. அதன்படி அண்மையில் அவர் இந்தியா அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​ட அவரை 20 நாட்கள் தங்​கள் கட்​டுப்​பாட்​டில் வைத்து விசா​ரிக்க என்ஐஏ அதிகாரிகள் அனு​மதி கோரினர். இந்நிலையில், ராணாவை 18 நாட்கள் என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க கடந்த 11-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவரிடம் மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT