இந்தியா

பிஹாரில் கடும் மழை, சூறாவளிக் காற்று: மின்னல் தாக்கி 58 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சூறாவாளிக் காற்று பல இடங்களில் வீசியது. பல நகரங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்ததுள்ளது.

இதனிடையே, பிஹார் மாநில முதல்வர் அலுவலகம்(சிஎம்ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல்வேறு பகுதிகளில் மழை, சூறாவளிக் காற்று, இடி, மின்னல் தாக்குதல், சுவர் இடிந்து விழுதல், மரங்கள் விழுதல் போன்ற சம்பவங்களால் பிஹாரில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT