இந்தியா

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் காரணமல்ல: ஏ.கே.அந்தோனி

செய்திப்பிரிவு

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு துணைத்தலைவர் ராகுல்காந்தி காரணம் இல்லை என முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோனி கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான ஏ.கே.அந்தோனி தனது அறிக்கையை கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அந்தோனியிடம் டெல்லியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், "ராகுலும், சோனியாவும் தான் நாடு முழுவதும் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றனர். காங்கிரஸ் தோல்விக்கு நிச்சயம் ராகுல் காந்தி காரணம் அல்ல. ஆனால், அதைத்தவிர இப்போதைக்கு நான் ஏதும் தெரிவிக்கப்போவதில்லை" என்றார்.

விசாரணைக் குழுவின் மற்றொரு உறுப்பினரான முகுல் வாஸ்னிக் கூறுகையில்: சோனியா, ராகுல் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும் என்றார்.

16-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT