இந்தியா

கேரளாவில் முனம்பம் வக்பு நில பிரச்சினை: குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: முனம்பம் வக்பு நிலப் பிரச்சினை தொடர்பாக உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள முனம்பம், சேரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் 404 ஏக்கர் நிலத்துக்கு கேரள மாநில வக்பு வாரியம் உரிமை கோரி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள மக்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் நிலவரி ரசீதுகள் தங்களிடம் இருக்கும் நிலையில், வக்பு வாரியம் சட்டவிரோதமாக தங்கள் நிலம் மற்றும் சொத்துகளுக்கு உரிமை கோருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேறியதை தொடர்ந்து, தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று கிராம மக்கள் நம்பியுள்ளனர்.

இதனிடையே இதுதொடர்பான வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. முனம்பம் பிரச்சினைக்காக கேரள மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதி விசாரணைக் கமிஷனை ரத்து செய்யவும், புதிதாக உயர்மட்டக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT