பிரதமர் மோடி தான் ஒரு தலைவர் அல்ல என நிரூபித்துவிட்டார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. சுமார் 12 மணி நேர விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன.
அரசுக்கு எதிராக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்த கொண்டு பேசியதை காங்கிரஸ் தேசிய தொடர்பாளர் குஷ்பூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் சோனியா காந்தியை போல பேச முயற்சித்துள்ளீர்கள். ஆனால், நிங்கள் ஒரு தலைவர் அல்ல என்று நிருபித்துவிட்டீர்கள். இதற்குமுன், இப்படி மோசமான பிரதமரை பார்க்கவில்லை. பிரதமர் ஒரு சிறந்த நடிகர் என்று கூறுவர்; ஆனால் அவர் தற்போது சிறந்த நகைச்சுவை நடிகர் என்று நிரூபித்துவிட்டார். எங்களை சிரிக்க வைத்ததற்கு நன்றி”என்று பதிவிட்டுள்ளார்.