இந்தியா

AI உருவாக்கிய ஸ்டுடியோ கிப்லி பாணியில் பிரதமர் மோடியின் படங்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய ஸ்டுடியோ கிப்லி பாணியிலான பிரதமர் மோடியின் படங்களை அரசு, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்படும் ஜப்பானின் ஸ்டுடியோ கிப்லியில் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் அனிமேஷன்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Main character? No.
He’s the whole storyline

Experience through New India in Studio Ghibli strokes.#StudioGhibli#PMModiInGhibli pic.twitter.com/bGToOJMsWU

சர்வதேச அளவில் ஈர்க்கக்கூடிய அனிமேஷன் பாணியாக ஸ்டுடியோ கிப்லி விளங்குகிறது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பலரும் புகைப்படங்களை அனிமேஷன்களாக மாற்றி அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், தனது புகைப்படத்தை அனிமேஷனமாக மாற்றி அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ஸ்டூடியோ கிப்லி மூலம் அனிமேஷன்களாக மாற்றப்பட்டு அவை MyGovIndia எக்ஸ் பக்கத்தில் அரசு பகிரப்பட்டுள்ளது. "முக்கிய கதாபாத்திரமா? இல்லை. அவர்தான் முழு கதைக்களமும். ஸ்டுடியோ கிப்லி ஸ்ட்ரோக்குகளில் புதிய இந்தியாவை அனுபவியுங்கள்" என்று எழுதப்பட்ட தலைப்புடன் பிரதமர் மோடியின் ஸ்டூடியோ கிப்லி அனிமேஷன்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் தொகுப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் போன்ற உலகத் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்புகள், இந்திய ராணுவ சீருடையில், பெருமையுடன் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி, 2023 இல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோல் உடன் நிற்கும் புகைப்படங்கள் போன்றவை அனிமேஷன்களாக மாற்றப்பட்டுள்ளன.

தேஜாஸ் இரட்டை இருக்கை லைட் காம்பாட் விமானத்தில் பறக்கும் காட்சி, வந்தே பாரத் ரயிலின் அருகில் நிற்கும் காட்சி, மாலத்தீவு வருகை, தூய்மை இந்தியா இயக்கத்தில் பங்கேற்ற படங்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT