இந்தியா

மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம்

செய்திப்பிரிவு

மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டு 2 நாட்களுக்கு பின்பும் பதற்றம் நிலவுகிறது. பள்ளிகள், கடைகள் மூடப்பட்டுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குகி இனத்தவர் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஏற்பட்ட மோதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இங்கு தொடர் கலவரம் நிலவியதால், குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஹமர் இன்புயி பிரிவைச் சேர்ந்த பொதுச் செயலாளர் ரிச்சர்ட் ஹமர் , ஜோமி பிரிவைச் சேர்ந்த நபர்களால் கடந்த ஞாயிற்றுக் கிழமை தாக்கப்பட்டார். இது இருதரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தி அங்கு ஊரடங்கு பிறப்பிக்கும் நிலையை கொண்டு வந்தது. கடந்த செவ்வாய் கிழமை இரவும் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பள்ளிகள். கடைகள் மூடப்பட்டுள்ளன.

மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்டுத்த பாதுகாப்பு படையினர் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்நிலையில் நேற்றும் கடைகளை மூடும்படி மாணவர் அமைப்பினர், கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் மணிப்பூர் எம்எல்ஏ.க்கள், பழங்குடி அமைப்பினர் அமைதியை ஏற்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதன்பின் பழங்குடி அமைப்பினர் விடுத்த அறிக்கையில், ‘‘அமைதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட அமைதிக் குழுவை உருவாக்கவும். எதிர்காலத்தில் வன்முறையை தடுக்கவும் ஒப்புக்கொள்ளபட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT