பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னல் 
இந்தியா

‘உடலின் அனைத்து இடத்திலும் தங்கத்தை மறைத்து கடத்தினார்’ - ரன்யா ராவை விமர்சித்த பாஜக எம்எல்ஏ

செய்திப்பிரிவு

பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ரன்யா ராவை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னல். மேலும், இதில் மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“தனது உடல் முழுவதும் எங்கெல்லாம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முடியுமோ அதை ரன்யா ராவ் செய்துள்ளார். பேரவை கூடும் போது இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் குறித்த விவரத்தை நான் வெளியிடுவேன். இந்த கடத்தல் குறித்த முழு விவரத்தை நான் சேகரித்துள்ளேன்.

தங்கம் எப்படி வாங்கப்பட்டது. அதை ரன்யா ராவ் எப்படி கடத்தி வந்தார். சோதனை சார்ந்த விஷயங்களில் அவருக்கு யார் எல்லாம் உதவினார்கள் என்ற விவரம் என்னிடம் உள்ளது” என பசனகவுடா பாட்டீல் யத்னல் தெரிவித்துள்ளார்.

கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32) துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தால் கடந்த 3-ம் தேதி பெங்​களூரு சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது வழக்​குப்​ப​திவு செய்​துள்ள வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் அவ‌ரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ரூ.2.67 கோடி ரொக்​கப்​பண​மும், ரூ.2.06 கோடி மதிப்​பிலான தங்க நகைகளும் சிக்​கின.

ரன்யா ராவை விசா​ரித்​த​தில் அவருக்கு சர்​வ​தேச தங்க கடத்​தல் கும்​பல் மற்​றும் பெங்​களூரு​வின் முக்​கிய புள்​ளி​களு​டன் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து பெங்​களூரு நட்​சத்​திர விடு​தி​யின் உரிமை​யாளர் தருண் ராஜ் கைது செய்​தனர். இதையடுத்து சிபிஐ மற்​றும் அம‌லாக்​கத்​துறை அதி​காரி​கள் ரன்யா ராவ் மீது வழக்​குப்​ப​திவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​ற‌னர்.

SCROLL FOR NEXT