இந்தியா

மணிப்பூரில் ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம்

செய்திப்பிரிவு

மணிப்பூரில் ஒரு மணி நேரத்தில் நேற்று 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மற்றும் 4.1 அலகுகளாக பதிவானது.

மணிப்பூரில் நேற்று முற்பகல் 11.06 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மதியம் 12.20 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் விஷ்ணுபூரில் 66 கி.மீ. ஆழத்தில் இவை ஏற்பட்டதாக மத்திய புவி அறிவியல் துறையின் கீழ் செயல்படும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.

இதில் முதல் நிலநடுக்கத்தை தங்கள் அலுவலகத்தில் நன்கு உணர்ந்ததாக இம்பால் விமான நிலையம் அருகில் உள்ள மத்திய அரசு அலுவலகம் ஒன்றின் அதிகாரி கூறினார். இந்த நிலநடுக்கங்களால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

முன்னதாக நேற்று அதிகாலை மியான்மரில் இரண்டு லேசான நிலநடுக்கங்கள் பதிவாகின. அதிகாலை 3.36 மணிக்கு 4.7 ரிக்டர் அளவிலும் அதைத் தொடர்ந்து அதிகாலை 3.54 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT