இந்தியா

டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஆதிஷி கார் தடுத்து நிறுத்தம்

செய்திப்பிரிவு

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் கூச்சலிட்டனர். இதனால் 21 எம்எல்ஏக்கள் 3 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், சட்டப்பேரவை வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி , நேற்று சட்டப்பேரவை வளாகத்துக்குள் நுழைய முயன்றார். ஆனால், அவரது கார் சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆதிஷி கூறுகையில், அம்பேத்கர் போட்டோ மற்றும் பெயரில் பாஜக.,வுக்கு பிரச்சினை உள்ளது. நாங்கள் ஜெய் பீம் கோஷம் எழுப்பினால், வெளியே அனுப்பப்படுகிறோம். ஆளும் கட்சி எம்எல்ஏ.க்கள் மோடி கோஷம் எழுப்பினால் அவர்கள் வெளியேற்றப்படுவதில்லை. அம்பேத்கரை விட பிரதமர் மோடி பெரியவர் என பாஜக.,வினர் நினைக்கிறார்களா? என்றார்.

SCROLL FOR NEXT