இந்தியா

குஜராத்தில் ஒற்றுமை சிலையை பார்வையிட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

செய்திப்பிரிவு

காந்திநகர்: குஜராத்தின் நர்மதை மாவட்டத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பார்வையிட்டார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் இரவு நர்மதை மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரை (கேவடியா) அடைந்தார்.

அவர் நேற்று காலை ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமைக்கான சிலையை பார்வையிட்டார். இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து சர்தார் சரோவர் அணை மற்றும் ஏக்தா நகரில் உள்ள ஜங்கிள் சஃபாரி பூங்காவை முர்மு பார்வையிட்டார்.

அப்போது, அணை கட்டுவதற்கான போராட்டங்கள், அணையின் கொள்ளளவு, மின்னுற்பத்தி திறன் மற்றும் அணையால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம் விளக்கப்பட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT