எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு - கஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்றிரவு 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் ஹம்ரிபூர் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய தரப்பில் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 11 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 20 முறை பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது.
இதில், ஆகஸ்ட் 11-ல் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.