இந்தியா

ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் நிழல் உலக தாதாவின் மனைவி டெல்லியில் கைது

செய்திப்பிரிவு

ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் நிழல் உலக தாதாவின் மனைவி கைது செய்யப்பட்டார்.

டெல்லியைச் சேர்ந்தவர் ஹஷிம் பாபா. நிழல் உலக தாதாவான இவர் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இவர் மீது போலீஸில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவரது மனைவி ஸோயா கான்.

இந்நிலையில் தாதா ஹஷிம் பாபாவை போலீஸார் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து கணவரின் போதைப் பொருள் கடத்தல் வேலையை ஸோயா கான் செய்து வருகிறார். இதற்காக ஏராளமான ஆட்களை பணியில் அமர்த்தியுள்ளார் ஸோயா. இதனால் போதைப் பொருள் கடத்தும் கும்பலால் லேடி டான் என்று ஸோயா கான் அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஸோயா கானை போலீஸார், ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை கைது செய்தனர். 270 கிராம் எடையுள்ள போதைப் பொருளாகும் அது.

திஹார் சிறையிலுள்ள கணவர் ஹஷிம் பாபாவை, ஸோயா கான் அடிக்கடி சென்று பார்த்து வந்தார். சிறையில் இருந்தபடியே மனைவிக்கு தேவையான உத்தரவுகளைக் கொடுத்து போதைப் பொருள் வேலையை ஹஷிம் பாபா தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

இந்நிலையில்தான் டெல்லி குற்றப்பிரிவு சிறப்பு போலீஸார், ஸோயாவை கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT