சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு கடந்த 11-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின.
இங்கு மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளையும் பாஜக கைப்பற்றியது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. இங்கு மொத்தம் உள்ள 49 நகராட்சி கவுன்சில் தலைவர் பதவிகளில் 35 இடங்களில் பாஜக வென்றது. காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது. 114 நகர பஞ்சாயத்துகளில் 81 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 22 இடங்களை கைப்பற்றியது. நகராட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களை பாஜக கைப்பற்றியது. ராய்ப்பூரில் மொத்தம் உள்ள 70 வார்டுகளில் பாஜக 60 இடங்களில் வென்றது.