இந்தியா

முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது வழக்கு தொடர குடியரசு தலைவர் அனுமதி கோரி உள்துறை அமைச்சகம் கடிதம்

செய்திப்பிரிவு

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது வழக்கு தொடர குடியரசுத் தலைவரிடம் அனுமதி கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மனுவை அனுப்பியுள்ளது.

2017-ல் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. மேலும், சத்யேந்தர் ஜெயின் அமைச்சராக இருந்தபோது ரூ. 11.78 கோடிக்கு செயல்படாத நிறுவனங்கள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ-யும் குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் அவர் மீது, பாரீதய நியாய சுரக்சா சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டம் 218-வது ஷரத்தின்போது வழக்கு தொடர்வதற்கு குடியரசுத் தலைவரின் அனுமதியைக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளது.

அமலாக்கத்துறை அமைச்சகத்திடம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடர போதுமான சாட்சிகள், முகாந்திரம் உள்ளது என்றும், அனுமதியை குடியரசுத் தலைவர் அளிக்கவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT