கோப்புப்படம் 
இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு உதவியதாக 500-க்கும் மேற்பட்டோர் கைது

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், இந்த தாக்குதலில் அவரது மனைவியும், உறவினரும் காயமடைந்தனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள காஷ்மீர் தீவிரவாதிகளின் உறவினர்கள் உட்பட தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது அதற்கு உதவியவர்கள் என சந்தேகிக்கப்படும் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லைக்கு அப்பால் இருந்து செயல்படும் தீவிரவாதிகளுக்கு இதுபோன்ற தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற செய்தியை அனுப்புவதற்காகவே முதன்முறையாக இத்தனைபேர் தடு்ப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த செய்திகளை தீவிரவாதிகளிடம் அனுப்புவதால் முடிவுகள் நமக்கு சாதகமாக அமைந்துள்ளன.

இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT