மத்திய அமைச்சர்கள், முன்னாள் ஆளுநர்கள், அரசு விருந்தினர்களின் உபசரிப்புக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.1,024.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் குழு, அமைச்சரவை செயலகம், பிரதமர் அலுவலகம். அரசு விருந்தினர்களின் உபசரிப்பு, பொழுதுபோக்கு முன்னாள் ஆளுநர் களின் சம்பளம் போன்ற செலவினங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.1,024 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்களின் சம்பளம், இதர படிகள், போக்குவரத்து செலவுகளுக்கு ரூ.619.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு செயலகத்தின் நிர்வாக செலவுகள் மற்றும் விண்வெளி திட்ட செலவுகளுக்காக ரூ.182.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக செலவு களுக்கு ரூ.70.91 கோடியும் அரசு விருந்தினர்களின் உபசரிப்பு மற்றும் பொழுதுபோக்குகளுக்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட அதே அளவான ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.