இந்தியா

குடியரசு தலைவர் அலுவலகத்துக்கு ரூ.141 கோடி: மத்திய பட்ஜெட்

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.141.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் சம்பளம், இதர படிகள், ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கான சம்பளம், நிர்வாக செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.141.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.60 லட்சம் குடியரசுத் தலைவரின் சம்பளம், படிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் குடியரசுத் தலைவர் சம்பளத்துக்காக இதே தொகை ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு

மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.133.61 கோடியாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.8.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT