இந்தியா

உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.33 லட்சம் கோடி: மத்திய பட்ஜெட்

செய்திப்பிரிவு

2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2,33,210.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும் பங்கு அதாவது ரூ.1,60,391.06 கோடி மத்திய காவல் படைகளான சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப் போன்றவற்றுக்கு வழங்கப்பட உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு போன்ற பணிகளை இந்த காவல் அமைப்புகள்தான் மேற்கொண்டுள்ளன.

கடந்த 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.2,19,643.31 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையி்ல் தற்போது அதைவிட கூடுதலான தொகை உள்துறை அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT