இந்தியா

மகா கும்பமேளாவில் திருப்பதி தேவஸ்தான ஊழியர் மாயம்

செய்திப்பிரிவு

திருப்பதி: உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மாதிரி ஏழுமலையான் கோயில் நிர்மாணிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ஆகம விதிகளின்படி பூஜைகளை நடத்த அர்ச்சகர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் என சுமார் 200 பேரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பிரியாக்ராஜ் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் அங்கு பணியாற்றி வந்த சுப்பிரமணியம் என்ற ஊழியரை கடந்த புதன்கிழமை மாலை முதல் காணவில்லை என கூறப்படுகிறது. போலீஸார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியத்தை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT