இந்தியா

நள்ளிரவு 12 மணி வரை ஓட்டல் நடத்த அனுமதி: ஆந்திர அமைச்சர் துர்கேஷ் தகவல்

செய்திப்பிரிவு

காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஆந்திர ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் 2 நாள் கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில சுற்றுலா துறை அமைச்சர் துர்கேஷ் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த ஆட்சியை போன்று ஓட்டல்காரர்களிடம் அராஜகம் செய்யும் அரசு இதுவல்ல. விரைவில் நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்களின் நலனுக்காக ஓட்டல்கள் திறக்க அனுமதி வழங்கப்படும். விசாகப்பட்டினம் ருஷிகொண்டாவில் முன்பு மக்கள் சுற்றுலாவுக்காக வந்து கொண்டிருந்தனர். ஆனால், கடந்த ஆட்சியில் அங்கு மலையை நாசம் செய்து கட்டிடங்களை கட்டி சுற்றுலா துறையின் வளர்ச்சியையே கெடுத்து விட்டனர். இதனால் சுற்றுலா துறைக்கு நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் ஓட்டல்கள் வளர்ச்சிக்கு சிறப்பாக வழி வகுத்து வருகின்றனர். ஓட்டல்களுக்கு விரைவில் மின் கட்டணத்திலும் மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT