இந்தியா

சட்டத்துக்கு மேலானவர் யாரும் இல்லை: தம்பதி வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

நாட்டில் சட்டத்துக்கு மேலானவர் யாரும் இல்லை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரிந்து வாழும் கணவன் - மனைவி இடையிலான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மணிஷ், கே.வினோத் சந்திரன் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பிரிந்து வாழும் மனைவி ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதால் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டியிருக்கும் என கணவர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், “அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி, நீங்கள் ஒரு தொழிலதிபர். நீதிமன்றத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து நீங்களே உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் நீங்கள் அச்சப்பட வேண்டாம். உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம். இந்த நாட்டில் சட்டத்துக்கு மேலானவர் யாரும் இல்லை" என்று தெரிவித்தனர்.

கணவன் - மனைவி இருவரும் அமர்ந்து பேசி பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண முயற்சிக்கலாம் என்று இரு தரப்பு வழக்கறிஞர்கள் கருதியை தொடர்ந்து வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT