இந்தியா

பார்வையாளர்களை கவர்ந்த பிரதமரின் தலைப்பாகை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு குடியரசு தின விழாவின்போதும் பல்வேறு மாநிலங்களின் தலைப்பாகைகளை பிரதமர் நரேந்திர மோடி அணிந்து வருகிறார்.

இந்த வரிசையில், பிரதமர் நேற்று ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த பந்தானி தலைப்பாகையை அணிந்திருந்தார். மஞ்சள் நிறத்திலான அந்த தலைப்பாகை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

விழா முடிந்த பிறகு பார்வை யாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். ‘அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அனைவருக்கும் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். நாட்டின் ஜனநாயகம். கண்ணியம். ஒற்றுமையின் ஆணி வேராக அரசியலமைப்பு சட்டம் விளங்குகிறது.

இதை மேலும் வலுவாக்க குடியரசு தின விழாவில் உறுதி யேற்போம்’ என்று தனது சமூக வலைதள பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT