இந்தியா

காசோலை மோசடி வழக்கில் ராம் கோபால் வர்மாவுக்கு 3 மாத சிறை

செய்திப்பிரிவு

மும்பை: பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா மீதான காசோலை மோசடி வழக்கில் அந்தேரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஒய்.பி. பூஜாரி வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நெகோஷியபிள் இன்ஸ்ட்ரூமென்ட் சட்டத்தின் கீழ் ராம் கோபால் வர்மா மீதான குற்றம் நிரூபணமாகியுள்ளது. எனவே, அவருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டும் பிறப்பிக்கப்படுகிறது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் ராம்கோபால் வர்மா புகார்தாரருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.3,72,219 செலுத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு வழங்கப்படும்போது இயக்குநர் வர்மா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன் காரணமாகவே அவருக்கு எதிரான கைது வாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT