இந்தியா

மதுரை சென்ற சொகுசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 4 பேர்  உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சித்தூர்: ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து மதுரை நோக்கி நேற்று சொகுசு பேருந்து சென்றது. இந்த பேருந்தும், சித்தூர் காஜுலபல்லி எனும் இடத்தில் மணல் டிப்பர் லாரியும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த பிரசாந்த், கன்னியாகுமரியை சேர்ந்த ஜீவா, திருப்பதியை சேர்ந்த பொன். சந்திரா, ஸ்ரீதர் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். டிப்பர் லாரி திடீரென வேகமாக தேசிய நெடுஞ்சாலையில் வந்து, பேருந்தின் நடுவில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் கண்டவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சித்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT