கோப்புப்படம் 
இந்தியா

சீனாவில் பரவும் தொற்றை கண்காணிக்கிறோம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: சீனாவில் ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சீனாவில் எச்எம்பிவி தொற்று பரவியுள்ளதாக வந்த தகவலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த தொற்று கடந்த 2001-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது கேரளா உட்பட உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த தொற்று இதற்கு முன்பும் கேரளாவில் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் கேரள ஆய்வகங்களில் உள்ளது. இந்த தொற்று குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை. இவ்வாறு அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறினார்.

SCROLL FOR NEXT