அஜய் குமார் பல்லா, ஆரிஃப் முகமது கான் 
இந்தியா

மணிப்பூர், கேரளா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் - குடியரசுத் தலைவர் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் மாநில ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு மாநில ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

ஆளுநர் நியமனம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒடிசா மாநில ஆளுநர் ரகுபர் தாஸின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இந்த சூழலில் மிசோரம் மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி, ஒடிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிசோரம் மாநில ஆளுநராக முன்னாள் ராணுவ தலைவர் விஜய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பிஹார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பொறுப்பேற்கும் நாள் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT