இந்தியா

முப்படை தளபதிகளை சந்திக்கிறார் மத்திய அமைச்சர் ஜேட்லி

செய்திப்பிரிவு

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி இன்று முப்படை தளபதிகளையும் சந்திக்கிறார்.

சர்வதேச எல்லையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர இந்தியா - சீனா எல்லையில் முப்படையினரும் மேற்கொண்டுள்ள கட்டுமான விரிவாக்க திட்டங்கள் குறித்தும் அருண் ஜேட்லியிடம் விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் 95 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. சர்வதேச எல்லையில், 25 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும், எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போதுமான ஏற்பாடுகளை ராணுவம் செய்துள்ளதாகவும் ஜேட்லி தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT