இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் அவரது நினைவிடத்தில் நேற்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். | படம்: பிடிஐ 
இந்தியா

இந்திரா காந்தி அன்புக்கும், தைரியத்துக்கும் உதாரணமானவர்: 107-வது பிறந்த நாளில் ராகுல் காந்தி புகழாரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா​வின் இரும்​புப் பெணமணி என்று அழைக்​கப்​படும் இந்திரா காந்தி 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம்​தேதி உத்தர பிரதேசத்​தில் உள்ள அலகா​பாத்​தில் பிறந்​தார்.

நேற்று அவரது 107-வது பிறந்​தநாளை​யொட்டி காங்​கிரஸ் கட்சி சார்​பில் மரியாதை செலுத்​தப்​பட்​டது. அப்போது ராகுல் காந்தி கூறிய​தாவது: தேச நலனுக்கான பாதை​யில் அச்சமின்றி நடைபோடுவதை எனது பாட்​டி​யிடம் இருந்​து​தான் கற்றுக்​கொண்​டேன். தைரி​யத்​துக்​கும், அன்புக்​கும் இன்றள​வும் எடுத்​துக்​காட்டாக விளங்​குபவர் அவர். அவரது வாழ்க்கையை பாடமாகக் கொண்டு கோடிக்​கணக்கான இந்தி​யர்கள் தொடர்ந்து உத்வேகம் பெறு​வார்​கள். இந்தியா​வின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்​பாட்டை பாது​காக்க அவர் தனது இன்னு​யிரை தியாகம் செய்​துள்ளார். அவரது பிறந்​தநாளில் எங்களின் பணிவான மரி​யாதை.
இவ்​வாறு ராகுல் ​காந்தி தெரி​வித்​துள்​ளார்​.

பிரதமர் மோடி அஞ்சலி: பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்திபிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார். ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவில், “தைரியம், தேசபக்தியின் உண்மையான உருவகமான ஜான்சி ராணி லட்சுமிபாய்க்கு அவரது பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துகிறேன். சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவரது துணிச்சல் பல தலைமுறை மக்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT