பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

பெங்களூருவில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி கைது

செய்திப்பிரிவு

பெங்களூருவில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 54 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த சாகர் குருங் (37) தனது மனைவி ஊர்மிளா குமாரியுடன் (38) பெங்களூருவில் உள்ள சதாசிவநகரில் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் ஊர்மிளா குமாரி தனது வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தை வீடியோ எடுத்து ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். 20-க்கும் மேற்பட்ட செடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடியும் அதில் இருந்தது.

இதனை கண்ட இளைஞர்கள் சிலர், சதாசிவ நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் சாகர் குருங்கின் வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். போலீஸார் வருவதைக் கண்ட ஊர்மிளா குமாரி க‌ஞ்சா செடிகளை பிடுங்கி, குப்பைக் கூடையில் போட்டார். இதை கண்டறிந்த போலீஸார் அங்கிருந்த 54 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் சாகர் குருங், ஊர்மிளா குமாரி ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். முதல்கட்ட விசாரணையில், இருவருக்கும் கஞ்சா பழக்கம் இல்லை. வாஸ்துவுக்காக கஞ்சா செடியை வளர்த்ததாக கூறினர். இதையடுத்து போலீஸார் இருவரையும் காவல் நிலைய ஜாமீனில் விடுதலை செய்தனர்.

SCROLL FOR NEXT