இந்தியா

தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா பதவியேற்பு

என்.மகேஷ்குமார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக பிஆர். நாயுடு தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை ஆந்திர அரசு நியமனம் செய்துள்ளது. இதில் நேற்று முன் தினம் புதன் கிழமை அறங்காவலர் குழு தலைவராக பிஆர். நாயுடு உட்பட 15 பேர் திருமலையில் ஏழுமலையான் முன்பு பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று ஹைதராபாத் பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனரான சுசித்ரா எல்லா, ஆந்திர மாநில பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி மற்றும் முனி கோட்டேஸ்வர ராவ் ஆகிய மூவரும் ஏழுமலையானை தரிசனம் செய்து, பதவி பிரமாணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் அணிவித்து தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT