இந்தியா

குஜராத்தில் புல்லட் ரயில் கட்டுமான பணியில் விபத்து: 3 தொழிலாளர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

அகமதாபாத்: மும்பை - அகமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற் கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

குஜராத்தின் ஆனந்த் மாவட்டம், வசாத் என்ற கிராமத்தில் மகி ஆற்றின் அருகில் நேற்று முன்தினம் மாலை கட்டுமான அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கனரகஇயந்திரம் ஒன்றின் ரோப் அறுந்ததில் ஸ்டீல் மற்றும் கான்கிரீட்டால் ஆன பிளாக்குகள் கீழேவிழுந்தன. இதில் 4 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலாரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT