இந்தியா

ம.பி. பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 35% இடஒதுக்கீடு

செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ம.பி.துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா நேற்று கூறியதாவது: மத்திய பிரதேச அரசு வேலைவாய்ப்பில் தற்போது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை 35 சதவீதமாக உயர்த்த அமைச்சரவைகூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணிக்கான தேர்வுக்கு 40 வயதில் 50 வயதாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. தவிர கூடுதலாக 245 உர விற்பனை மையங்கள் அமைப்பது உட்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT