இந்தியா

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் துவங்கியது

செய்திப்பிரிவு

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் துவங்கியது. மக்களவை வெற்றிக்கு பின்னர் பாஜகவின் தேசிய கவுன்சில் இன்று கூடியுள்ளது.

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் துவங்கியது. பாஜக தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அந்த கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று கூடியது. கட்சியின் நாடாளுமன்ற குழு அமித்ஷாவின் தேர்வுக்கு ஒப்புதல் அளித்தாலும், தேசிய கவுன்சிலால் அவரது நியமனம் உறுது செய்யப்படாமல் இருந்தது. இன்று காலை தொடங்கிய கூட்டத்தில், அமித் ஷா பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கூட்டத்தில் பாஜக தேசிய தலைவராக அமித் ஷா தேர்வு செய்யப்பட்டதற்கும் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாற்றுகின்றனர். மூத்தத் தலைவர் அத்வானி சிறப்புரையாற்றுகிறார்.

மேலும், அரசின் சாதனைகள் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன. இந்த கூட்டத்தில் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

SCROLL FOR NEXT