இந்தியா

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க துனிசியா சென்றது சிறப்பு விமானம்

செய்திப்பிரிவு

லிபியாவில் உள்நாட்டுப் போரில் சிக்கிய மேலும் 200 இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா போயிங் 777 ரக விமானம் துனிசியா புறப்பட்டுச் சென்றது.

லிபியாவில் அரசு நிர்வாகம் சீர்குலைந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. அங்கு சுமார் 18,000 இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தனர். உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டவுடன் படிப்படியாக இந்தியர்கள் வெளியேறத் தொடங்கினர்.

முன்னதாக நேற்று கேரளாவைச் சேர்ந்த 44 நர்ஸ்கள், இந்தியா வந்தடைந்தனர்.

இந்த நிலையில், லிபியாவில் பணியாற்றும் மேலும் 200 இந்தியர்கள், இந்திய வெளியுறவுத் துறையின் உதவியோடு துனிசியாவிலிருந்து புறப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் நாளை இந்தியா வந்தடைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT