இந்தியா

மல்லிகா ஷெராவத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

‘டர்டி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தில் தேசிய கொடியின் நிறத்தில் கவர்ச்சியாக உடை அணிந்து ஓர் அரசுத்துறை கார் மீது அமர்ந்திருப்பது போல நடிகை மல்லிகா ஷெராவத் நடித்துள்ளார். இதுதொடர்பாக, ஹைதராபாத்தை சேர்ந்த மனித உரிமை கழக செயலாளர் தனகோபால் ராவ் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். திரைப்படத்தில் மல்லிகா ஷெராவத் அணிந்திருந்த உடை தேசிய கொடியை அவமானப்படுத்துவது போல் உள்ளதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது குறித்து 4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்கு மாறு மல்லிகா, திரைப்படத்தின் தயாரிப்பாளர் பொக்காடியா, மத்திய உள்துறை அமைச்சகம், சென்சார் போர்டு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டது.

SCROLL FOR NEXT