இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் மேலவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா திடீரென ரத்து செய்தது.
காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் பேச்சுவார்த்தை நடத்தியதை கண்டித்தும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் எல்லையில் அமைதியை நிலவ செய்ய, மத்திய அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. எல்லையில் நிலவும் வன்முறைகளை சரிசெய்ய மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.