இந்தியா

ஜார்க்கண்டில் 1.50 லட்சம் வேலைவாய்ப்பு: பாஜக வாக்குறுதி

செய்திப்பிரிவு

ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பாஜக கூட்டணி சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியதாவது: ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்துக்கள், ஆதிவாசிகள் மற்றும் ஏழைகளை பிரதிநிதித்துவம் செய்யும் அரசு அமைக்கப்படும்.

ஜார்க்கண்டில் போட்டித் தேர்வுகளுக்கான வினாத் தாள்கள் சமீபத்தில் கசிந்துள்ளன. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும். மக்களுக்கு அத்தியாசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் தற்போதைய அரசு தோல்வி அடைந்துள்ளது. தற்போதைய நிர்வாகம் ஊடுருவல்காரர்கள், மாபியா மற்றும் இடைத்தரகர்களால் நடத்தப்படுகிறது. மக்களின் நலனை விட தங்களின் தனிப்பட்ட நலனில்தான் ஹேமந்த் சோரன் அரசு கவனம் செலுத்துகிறது. இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

SCROLL FOR NEXT