பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் வால்மீகியின் சிலைக்கு முதல்வர் சித்தராமையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   
இந்தியா

கர்நாடகாவில் பழங்குடியின உண்டு உறைவிட‌ பள்ளிகளுக்கு வால்மீகி பெயர்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளின் பெயர்களும் மாற்றப்பட்டு, வால்மீகியின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (அக்.17) கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் வால்மீகியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கர்நாடக அரசு பழங்குடியின மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரிகளின் தரம் ரூ.205 செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளின் பெயர்களும் மாற்றப்பட்டு, மகரிஷி வால்மீகியின் பெயரை சூட்டப்படும். ரெய்ச்சூர் பல்கலைக்கழகத்துக்கும் வால்மீகியின் பெயர் சூட்ட‌ப்படும்.” என தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு வால்மீகி அமைப்புகளும், நாயகா உள்ளிட்ட பழங்குடியின அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT