இந்தியா

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு இசட் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: லோக் ஜன சக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். அவருக்கு எஸ்எஸ்பி படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி முதல் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி சிஆர்பிஎப் படையை சேர்ந்த 33 வீரர்கள், சிராக் பாஸ்வானுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

SCROLL FOR NEXT