போபால்: ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி, ராகுல் காந்தியின் தோல்வி அடைந்த தலைமைக்கு ஒரு சாட்சியமாக விளங்குகிறது என்று ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கூறினார்.
ஹரியானா மாநில சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், ‘‘ஹரியானாவில் நான் பிரச்சாரம் செய்தபோது இங்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மூன்றாவது முறையாக தோல்வி அடைவார் என்று கூறினேன்.
அவ்வாறே நிகழ்ந்துள்ளது. ராகுல் காந்தியின் தலைமையை காங்கிரஸ் கட்சியினர் கூட விரும்பவில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஹரியானாவில் காங்கிரஸ் முன்வைத்த புகார் களை மக்கள் நிராகரித்து விட்டனர். அங்கு மூன்றாவது முறையாக தாமரை மலர்ந்துள்ளது’’ என்றார்.